பூண்டுலோயா – டன்சினன் பகுதியில் 25 வயதிற்குட்பட்ட இளைஞரொருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(30) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இளைஞனின், தந்தை மற்றும் தம்பியால் இவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறு பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கைகலப்பாகி கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உயிரிழந்தவரின் தந்தை மற்றும் அவருடைய தம்பி ஆகிய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.