அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட 63 பொருட்களுக்கான தற்போதைய இறக்குமதி வரியை எவ்வித திருத்தங்களும் இன்றி பேணுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் டிசம்பர் 31, 2024 அன்று வெளியிடப்பட்டத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பருப்பு, வெள்ளை சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம், தேங்காய் எண்ணெய், தாவர எண்ணெய், டின் மீன் மற்றும் காய்ந்த மிளகாய் போன்ற பொருட்களின் தற்போதைய பண்ட வரியை மாற்றமில்லாமல் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானமானது, பொருட்களின் விலை உயர்வை தடுக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டுள்ளதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அரிசி, தினை, பச்சைப்பயறு, சோளம், மஞ்சள், பழங்கள், மீன் மற்றும் உலர் மீன் போன்ற உணவுப் பொருட்களுக்கான செயல்படுத்தப்பட்ட அதே வரி வீதங்களை பேணுவுள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை உள்ளூர் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.