கேரளாவில் தனியார் பாடசாலை வாகனம் விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர்உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே குருமாத்தூர் பகுதியில் தனியார் பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (01) மாலை வகுப்பு முடிந்து, மாணவர்கள் பாடசாலை வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது கண்ணூர் அருகே வளகை பகுதியில் வந்து கொண்டிருந்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 15 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு மாணவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.