2025 ஆம் ஆண்டின் புதிய வருடத்திற்கான அரச பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (01) காலை 8.30 மணிக்கு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தேசிய கொடியேற்றல், தேசிய கீதம் இசைத்தல், மௌன அஞ்சலி, சத்தியப்பிரமானம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
இதேவேளை 9 மணிக்கு மான்புமிகு ஜனாதிபதி செயலக நிகழ்வுகள் ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒலிபரப்பு நிகழ்விலும் பிரதான அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நூலகர்கள் சுகாதார பகுதி ஊழியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியின் எண்ணகருவிற்கு ஏற்ப ‘கிளின் சிறிலங்கா’ தேசிய வேலைத்திட்டத்தை புதுவருடத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சபையின் செயலாளரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.