உர நிவாரணம் வழங்கப்படாத விவசாயிகளுக்கு இந்த வாரத்திற்குள் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை விவசாயம் மற்றும் கால்நடை வளத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த பெரும்போகம் ஆரம்பமாவதற்கு முன்னர் உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் நாட்களில் நெல்லுக்கான புதிய உத்தரவாத விலை அறிவிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பதாக நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார்.
இதேவேளை, சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் வாரத்துக்குள் தீர்வு எட்டப்படும் என அரச வாணிப கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 10, 400 மெற்றிக் தொன் அரிசி கொள்வனவானது எதிர்வரும் வாரம் இறக்குமதி செய்யப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சந்தையில் நிலவும் அரிசி தட்டப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது