கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் எஞ்சிய ஐவர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஏழு ஜனாதிபதி வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
செலவு அறிக்கை சமர்ப்பிப்பு கால எல்லை இறுதி நாளன்று வேட்பாளர் ஒருவர் தபால் மூலம் செலவு அறிக்கையை அனுப்பியதால் அவர் மீது வழக்கு தொடரப்படாது என தேர்தல் ஆணைக்குழு அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஜனாதிபதித் தேர்தல் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர் மீது வழக்குத் தொடரப்பட்டால், அந்த வேட்பாளர் மாகாண சபை அல்லது உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்திக் கூறியுள்ளது.