போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கையாள்வதற்காக இலங்கை பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட இ-போக்குவரத்து சேவை வெற்றிகரமாகச் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் காணொளி நாடாக்கள் உட்பட 120 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து இந்த ‘இ-போக்குவரத்து’ முறைப்பாட்டு பிரிவை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை www.police.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். மற்றும் அதற்குரிய e-traffic’ செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் சேவையின் ஊடாக நாட்டில் வீதி ஒழுக்கத்தை உருவாக்குவதற்கு பங்களிக்குமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.