நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மருந்தக உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியினால் இன்று (06) கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரின் மருந்தகத்தில் விற்பனைக்காக ஏராளமான கருக்கலைப்பு மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.