கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புகள் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாய், கிரீன்லாந்து மற்றும் கனடா பற்றி சமூக ஊடகங்களில் செய்யப்பட்ட புதிய – இணைப்புவாத முன்மொழிவுகள் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ட்ரூடோவின் பதவி விலகல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப்,
51ஆவது மாநிலமாக கனடா நாட்டை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ள அநேகமான கனடா மக்கள் ஆசைப்படுகின்றனர்.
கனடாவில் உள்ள வர்த்தக சுமையை அறிந்ததனாலேயே ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியுள்ளார்.
கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும்.
மேலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து அவை முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.
ஒன்றுபட்டால், அது எவ்வளவு பெரிய தேசமாக இருக்கும் என கூறியுள்ளார்.