2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில், கடுமையான நிதிக் குற்றங்களை விசாரிப்பதற்காக, அமைக்கப்பட்ட நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படுவதன் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படவுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்
குறித்த நிதிக்குற்றப் புலனாய்வுப்பிரிவு, சிஐடியின் கீழ் கொண்டு வரப்பட்டாலும், அந்த பிரிவுக்கு தனியான பிரதி பொலிஸ் அதிபர் தலைமை தாங்குவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஏற்பாட்டின் கீழ், சிஐடியை மேற்பார்வையிட தனியான சிரேஸ்;ட பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவார்.
ஏற்கனவே குறித்த பிரிவின் கீழ் முன்னெடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள விசாரணைகளை மீண்டும் ஆரம்பிப்பதே இதன் நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும், இந்த மாத இறுதிக்குள் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்