Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் எல்லையை நோக்கி நகரும் அமெரிக்க போர்க்கப்பல்

ஈரான் எல்லையை நோக்கி நகரும் அமெரிக்க போர்க்கப்பல்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானின் அணுஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை முடக்கும் வகையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஈரான் – அமெரிக்கா இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் வரும் 19ஆம் திகதி 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இதில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகாவிட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கையை தொடங்கவும் தயங்கமாட்டேன் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தான் ஈரானுக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் விமானம் தாங்கும் போர்க்கப்பல்கள் ஈரான் அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ் ஹாரி ட்ரூமன் என்ற போர்க்கப்பலை மத்திய கிழக்கு பிராந்திய கடலில் நிலைநிறுத்தி உள்ளது. இது ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி அமைப்பு மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு அடுத்தப்படியாக யு.எஸ்.எஸ் .கார்ல் வின்சன் ஈரானையொட்டி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த போர்க்கப்பல் அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. பாரஷீக வளைகுடாவை நோக்கி விரைந்து பயணிக்கும் வகையில் யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் போர்க்கப்பல் தயாராக உள்ளது. ஏற்கனவே ஏமன் ஹவுதி மீது ட்ரூமன் போர்க்கப்பல் தாக்குதல் நடத்தியது. இதன் அடுத்தக்கட்டமாக யு.எஸ்.எஸ் .கார்ல் வின்சன் விமானம் தாங்கும் போர்க்கப்பல் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் இருந்து போர் விமானங்கள் எளிதாக பறந்து ஈரானை மின்னல் வேகத்தில் தாக்க முடியும். குறிப்பாக அணுசக்தி திட்டங்களுக்கான உள்கட்டமைப்புகளை நோக்கி குறிவைத்து அழிக்க முடியும். இதனால் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடன்பட வேண்டும்.

எதிர்வரும் 19ஆம் திகதி இத்தாலி தலைநகர் ரோமில் நடக்கும் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும். என்பதை மறைமுகமாக கூறும் வகையில் டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்

September 19, 2026
டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
செய்திகள்

டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

September 19, 2026
ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
Next Post
கண்டியில் 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டியில் 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.