நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தைய போட்டியில் பங்கேற்க அஜித்குமார் கார் ரேஸிங் எனும் அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற ’24H சீரிஸ்’ கார் ரேஸில் “911 GT3 R” என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி (901) 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடத்தை பெற்றது.
இதனையடுத்து, அஜித் தனது அணியினரை கட்டியணைத்து, குதித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.