இரண்டு வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) பிற்பகல் மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஏறாவூர் இரண்டாம் பிரிவு மக்காமடி வீதியைச் சேர்ந்தமுகமட் ஷரகீர் ஜப்பிரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் உள்ள கிணற்றில் அருகில் கதிரை ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவதினமான நேற்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது கிணற்றுக்கு அருகில் வைத்திருந்த கதிரையில் ஏறி கிணற்றை எட்டிப்பாத்த நிலையில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளது.
இந்த நிலையில் மாலை 6.00 மணியளவில் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடிய நிலையில் கிணற்றுக்குள் குழந்தை வீழ்ந்து கிடப்பதை கண்டு உடனடியாக குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதணையடுத்து குழந்தையை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோரின் கவனயீனத்தால் குழந்தை உயிரிழந்துள்ளது என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்