Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டின் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தொடக்க நிகழ்வு, 2025.06.12 ஆம் திகதி முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

முகாமைத்துவ வர்த்தக பீடத்திற்கு 2023/2024 ஆம் கல்வியாண்டுக்காக 403 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். குறித்த மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் உணவுகள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கி வரவேற்றது விஷேட அம்ஷமாகும்.

நிகழ்வின்போது மாணவர்கள் தொடர்பான ஆவணங்களை பதிவாளர் எம்.ஐ. நௌபர் மற்றும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எவ். பாரிஷா எம் ஹசன் ஆகியோரது பங்குபற்றலுடன் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் மாணவர்களுடன் சம்மந்தப்பட்ட துறைத்தலைவர்களிடம் ஒப்படைத்தார்.

திணைக்களங்களின் தலைவர்களான பேராசிரியர் கலாநிதி எம்.பி.எம். இஸ்மாயில், பேராசிரியர் கலாநிதி ஏ.இல்முடீன், பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என். சபானா ஆகியோர் தாங்கள் சார்ந்த துறைகளில் இணைந்துள்ள மாணவர்கள் கையாளவேண்டிய நடைமுறைகள் மற்றும் குறித்த துறைகளின் ஊடாக மாணவர்கள் அடையக்கூடிய நன்மைகள் தொடர்பில் உரையாற்றினர்.

முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் மாணவர் சங்க தலைவர் டி.எம்.ஏ.எஸ். தஸநாயக்க புதிய மாணவர்களை வரவேற்றதுடன் சிரேஷ்ட மாணவர்களுடன் இணைந்து தங்களது சிறந்த கற்றல் செயற்ப்பாடுகளை தொடர முடியும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் மாணவர்களை வரவேற்று கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. பிரதி பதிவாளர் பி.எம். முபீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் மற்றும், நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் பிரதம பாதுகாப்பு உத்தியோகத்தர், கல்விசாரா உதிதியோகத்தர்கள் மாணவர்கள் மற்றும் புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு