வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உள்ள பாதை கடக்கும் வெள்ளைக் கோட்டிற்கு அருகில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 10.45 மணியளவில்இடம்பெற்ற பஸ்வண்டி மற்றும் முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்ததுடன், பஸ்சாரதியை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர் .
குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் 3 மாணவர்கள் சம்பவதினமான நேற்று இரவு 10.45 மணியளவில் செங்கலடியில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு முச்சக்கரவண்டியில் பிரயாணித்து, பல்கலைக்கழகத்தின் முன்னாள் உள்ள வீதியை கடக்கும் வெள்ளைக்கோடு பகுதியில் எதிர்பக்கமாக விடுதி பக்கம் முச்சக்கரவண்டியை திருப்பும் போது, கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டி முச்சக்கரவண்டியுடன் மோதியதையடுத்து முச்சக்கரவண்டியில் பிரயாணித்த பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் உட்பட 4 பேர் 4 படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த அவர்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் பஸ்வண்டி சாரதியை கைது செய்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.