இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என்ற அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது.
இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம் இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.
இவற்றில் 15 வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே தரச்சான்றிதழ் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுள்ளன.
அவற்றின் மூலமாக சந்தைப்படுத்தப்படும் 48 வகையான டின்மீன்களுக்கு இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய 13 வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கும் எதுவித தரச்சான்றுகளும் வழங்கப்படாத நிலையிலேயே அவற்றின் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுவதாக தேசிய கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.