மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியில் உள்ள பூட்டப்பட்டிருந்த வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இந்த சடலம் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் மிச் நகர் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றியவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பூட்டப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை உணர்ந்த அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சொகோ தடயவியல் பொலிஸார், காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.