பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க என்பவர் இந்தியாவின் மும்பை நகரத்தில் வைத்து சர்வதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
“பொடி லெசி” கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட “பொடி லெசி” இலங்கையிலிருந்து தப்பிச் சென்றதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து, சர்வதேச பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் “பொடி லெசி” மும்பை நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.