மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி 20% மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுப்பாவனையின் ;
0 – 30 அலகுகளுக்கு 29%
31 – 60 அலகுகளுக்கு 28%
61 – 90 அலகுகளுக்கு 19%
98 – 180 அலகுகளுக்கு 18%
180 அலகுகளுக்கு மேல் 19% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுத் தேவை கருதிய மின் பாவனையாளர்களுக்கு 12%
அரச நிறுவனங்களுக்கு 11%
ஹோட்டல் துறைக்கு 31%
வழிபாட்டுத்தலங்களுக்கு 21%
தொழிற்துறைக்கு 30%
வீதி விளக்குகளுக்கு 11%
மொத்த விலைக் குறைப்பு 20% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்.