போதைப்பொருளை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வடமேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
போதைப்பொருளை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். அது தொடர்பில் மக்களுக்கு நாம் சரியான தகவல்களை சிறந்த முறையில் வழங்கி வருகிறோம்.
சில தகவல்களை வழங்குவதற்கான நம்பகத்தகுந்த ஏதுவான சூழல் கட்டமைப்பு தற்போது இல்லை. எனினும் நாம் இது தொடர்பில் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமைத்துவத்தின் கீழ் வடமேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்படாத பணிகளை நடைமுறைப்படுத்துவதற்காக எதிர்வரும் ஒருவார காலப்பகுதிக்குள் இந்த குற்றத்தடுப்பு பிரிவு நிறுவப்படவுள்ளது.
20 ஆம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கு அறிவித்தன் பின்னர் இதனை நிறுவ நடவடிக்கை எடுப்போம். இவற்றின் ஊடாக பல விடயங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்றார்.