நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதி 400 மில்லியன் ரூபாவினால் 65 ஆயிரம் வாக்குகளை பெற்றாரே தவிர உண்மையான வெற்றி அல்ல அதேவேளை கல்லாற்றில் கூட்டுறவு சங்க கட்டிடம் நிர்மாணிக்க 50 இலச்சம் ரூபா ஒதுக்கப்பட்டு கட்டிடம் நிறைவடைந்ததாக பணம் வழங்கப்பட்டது.
ஆனால் கட்டிடமே கட்டி முடிக்காமல் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் திணைக்களம் இலஞ்ச ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார் தெரிவித்தர்.
மட்டக்களப்பு ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி காரியாலயத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்று ஊடக மாநாட்டில் மேலும் தெரிவித்த அவர்,
மட்டக்களப்பில் அபிவிருத்திக்காக 25.07.2024 நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு விசேட நிதியாக 400 மில்லியன் ரூபாவும், வரவு செலவு திட்டத்தில் 5 கோடி ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நிதி ஒதுக்கப்பட்டதிலே மட்டக்களப்பு, கல்குடா தேர்தல் தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் வறுமை ஒழிக்கப்படவேண்டும். இங்கு அடிப்படை வசதி இல்லாத மக்கள் அதிகமாக இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு பட்டிருப்பு தேர்தல் தொகுதியை முன்னிலைப்படுத்தி பெருவாரியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி தேர்தலுக்கு அண்டிய காலத்திலும் அதன் பின்னரும் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட தொகை 10 கோடியே 6 இலச்சம் ரூபா, வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பிரதேசங்களுக்கு 10 கோடி 20 இலச்சத்து 20 ஆயிரம் ரூபா, மட்டக்களப்பு தொகுதிக்கு 4 கோடியே 44 இலச்சம் ரூபா ஓதுக்கப்பட்டுள்ளது
பட்டிருப்பு தொகுதியை முன்னிலைப்படுத்தி அனைத்து இந்து கிறிஸ்தவ ஆலயங்கள், விளையாட்டு மைதானங்கள், மயானங்கள், மற்றும் பொது அமைப்புகளுக்கு பெரும் தொகையான நிதி வழங்கப்பட்டுள்ளதுடன் கல்குடா, மட்டக்களப்பு தொகுதிகளுக்கு மிக சிறிய தொகையை வழங்கி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதுடன் ஒதுக்கப்படும் நிதிகள் தேவையானவற்றுக்கு ஒதுக்கப்படாமல் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இது தொடர்பாக தேர்தல் காலத்தில் பெரும் தொகையான நிதி ஏன் வழங்கப்பட்டது. என மட்டக்களப்பு தேர்தல் ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முறைப்பாடு செய்துள்ளோம். மட்டக்களப்பு மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அதேவேளை நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல்கட்டமாக நிதியை ஒரு ஆலயத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட நிதி டிசம்பர் மாதம் 3 ம் திகதி வழங்கப்பட்டிருக்கின்றது. இது தேர்தல் பிரச்சார நடவடிக்கை இடம்பெற்ற காலத்திலே இவ்வாறான பொரும் தொகையான நிதி ஆலயங்கள், விளையாட்டு மைதானங்களுக்கும் வழங்கப்பட்டு இதனூடாக விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு ஒரு தேவாலயத்துக்கு பூஜைக்கு சென்றிருந்தேன். அங்கு பங்கு தந்தை அறிவித்தார் இந்த ஆலய மதிலை உடைத்து கட்டும் திருப்பணிக்காக 10 இலச்சம் ரூபா இரா.சாணக்கியனால் வழங்கப்பட்டது என ஒலி பெருக்கியில் அறிவித்தார்.
அந்த பங்கு தந்தை போன்று எல்லா ஆலய குருக்கள்கள், விளையாட்டு கழக தலைவர்கள் மற்றும் நிதி வழங்கப்பட்ட அமைப்புகள் விளம்பரம் செய்தனர். இந்த விளம்பரத்தால் தான் அவர் இந்த 65 ஆயிரம் வாக்குகளை பெற்றாரே தவிர உண்மையான வெற்றி அல்ல. தேர்தல் காலங்களில் 400 மில்லியன்களை கொடுத்து பெற்ற வெற்றிதான் இந்த வெற்றி.
எனவே எதிர் வருகாலங்களில் அபிவிருத்தி திட்டம் நடைபெறும்போது அபிவிருத்தி குழு தலைவர் ஊடாக அரசாங்க அதிபரின் மேற்பார்வையின் கீழ் நிதி ஓதுக்கீடு வழங்கப்பட்டால் இது பாகுபாடு இன்றி சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படும்.
அதேவேளை கல்லாற்றில் கூட்டுறவு சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக 50 இலச்சம் ரூபா நிதி வழங்கப்பட்டு, அந்த கட்டிடம் நிறைவு பெற்றதாக தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக காட்டப்படுகின்றது. ஆனால் இன்று அந்த கூட்டுறவின் கட்டிடத்தின் நிலை இவ்வாறு இருக்கின்றது அதாவது தற்போழுது தான் கட்டித்திற்கு மேல் தளத்திற்கு கொங்கிறீற் இட்டுள்ளனர்.
இந்த கட்டிடத்தை யார் சென்று பார்வையிட்டு, இது முடிவுற்றதாக இதற்கான பணம் வழங்கப்பட்டது. எனவே இந்த மோசடி தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம். இதுபோன்ற பல ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக அதிகளவான தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இது தொடர்பான பூரண விசாரணை மேற்கொண்டு இதில் யார் தவறு இழைத்துள்ளார்கள் என்பதை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். இது மக்களுடைய வரிப்பணம் இந்த வரிப்பணத்தில் ஊழல்கள் செய்வதை உடனடியாக தடுத்த வேண்டும். ஜனாதிபதி கொண்டுவந்த கிளின் சிறிலங்கா திட்டத்தின் ஊடாக இவ்வாறான நடவடிக்கைகள் கிளின் செய்யாவிட்டால் மக்களுடைய வரிப்பணம் வீண்விரயமாக்கப்படும் எனவே தவறிழைத்த அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறத்தப்படவேண்டும்.
இதேவேளை மாவட்டத்திற்கு நாடாளுமன்ற உறப்பினர்கள் ஊடாக வழங்கப்படும் நிதி அத்தனையும் மக்களுடைய வரிப்பணத்திலே வழங்கப்படுகின்றது. ஆகவே தேர்தல் காலங்களில் இவ்வாறான நிதி வழங்கப்படும் போது பங்கு தந்தையர்கள் பகிரங்கமாக ஒலி பெருக்கியில் அறிவிக்கின்றார்கள் நாடாளுமன்ற உறப்பினர் இரா.சாணக்கியன் தந்ததால் தான் இந்த மதிலை கட்டுகிறோம் என ஒலி பெருக்கியில் அறிவிக்கின்றனர். எனவே ஏனைய அரசியல் கட்சிகளாக இருக்கின்ற நாங்களும் மற்றைய கட்சிகளும் பாதிக்கப்படும் நிலமை ஏற்படுகின்றது.
நாங்களும் பொது தேர்தலில் போட்டியிட்டோம். கனிசமானளவு வாக்குகளை பெற்றோம். இருந்த போதும் எங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து அல்லது வேறு வறு நிதியத்திலிருந்தே 10 ஆயிரம் ரூபா கூட எங்கள் கட்சிக்கு என யாரும் ஒதுக்கி தரவில்லை ஆனால் தேர்தல் காலங்களிலும் சரி மற்ற நேரங்களிலும் சரி நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படும் நிதி மக்களின் வரிபணத்தில் ஒதுக்கப்பட்ட பணம் என்பதனை பங்கு தந்தையர்களுக்கு அறிவிக்கவும். என மறைமாவட்ட ஆயருக்கு வேண்டுகொள் விடுக்கின்றோம்.
அவ்வாறே நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆலயங்களுக்கு வழங்கப்படுமாயின் அந்த நிதி அத்தனையும் மக்களை கசக்கி புழியப்பட்ட வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுகின்றது. என அறிவிக்கும்படி இந்து மத தலைவர்கள் குருக்கள்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். என அவர் தெரிவித்தார்.