உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கொரோன தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை உலகளாவிய சுகாதார அமைப்பு தவறாகக் கையாண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது 12 மாதங்களில் ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் மற்றும் அதன் பணிக்கான அனைத்து நிதி பங்களிப்புகளையும் நிறுத்தும் என தெரிவித்தார்.
WHO இன் மிகப்பெரிய நிதி ஆதரவாளராக அமெரிக்கா உள்ளது, அதன் மொத்த நிதியில் 18% அமெரிக்காவினுடையதென்பது குறிப்பிடத்தக்கது.