இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபர் விசா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை விடுவிப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.