அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
அதன்படி வருகிற 27ஆம் திகதிக்கு பிறகு அகதிகள் வருகைக்கு தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த காலக்கெடுவுக்கு முன்னதாக அமெரிக்காவுக்குள் நுழைய முறையான அனுமதியை பெற்ற அகதிகள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அகதிகளின் பயணத்தை ட்ரம்ப் நிர்வாகம் இரத்து செய்துள்ளது. அமெரிக்காவிற்கான அகதிகள் வருகை மறு உத்தரவு வரும் வரை இடைநிறுத்தப்படுவதாக ட்ரம்ப் நிர்வாகம் நேற்று (22) அறிவித்துள்ளது.