இந்த வருடத்தின் முதல் மூன்று வாரங்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்த விடயத்தினை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஜனவரி 1 முதல் 22 ஆம் திகதி வரை 177,403 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 30,847 பேர் இந்தியாவிலிருந்தும், 25,608 பேர் ரஷ்யாவிலிருந்தும் மற்றும் 14,95 பேர் பிரித்தானியாவிலிருந்தும் வருகை தந்துள்ளனர்.
அத்துடன் இந்த வருடத்தின் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜனவரி 2ஆம் திகதி அதிகூடிய சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இருப்பினும், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 208,253 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.