Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்க சுவிஸ் ஆதரவு

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்க சுவிஸ் ஆதரவு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க வேண்டிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து தூதுவர் இதன் போது வழிகாட்டுதல் வழங்கினார். இதற்காக பூர்வாங்க வசதிகளை வழங்க தேவையாயின் எந்த நேரத்திலும் அதற்கு உதவி வழங்க அவர் உடன்பாடு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் அனுபவத்தையும், தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்க முன்னுரிமை திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் ஏனைய தேவையான உதவிகள் மற்றும் “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்திற்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வடக்கு அபிவிருத்தி, தேசிய ஒற்றுமை மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் சுவிட்சர்லாந்து தூதுவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகேவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
Next Post
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான நாமல் தலைமையில் ஆரம்பமாகும் பிரச்சாரங்கள்

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான நாமல் தலைமையில் ஆரம்பமாகும் பிரச்சாரங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு