உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரச்சாரங்களை சிறிலங்கா பொதுஜன பெரமுனஇன்று (25) அனுராதபுரத்தில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குறித்த நடவடிக்கைகள் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், முதலில் ஜெய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேயதவிற்குச் சென்று அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரிடம் ஆசி பெற கட்சி முடிவு செய்துள்ளது.
அதனை தொடர்ந்து, இதைத் தொடர்ந்து, கிராமப்புறத் தலைவர்களின் பங்கேற்புடன் தொடர்ச்சியான பொதுக் கூட்டங்களை நடத்த சிறிலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறனதொரு பின்னணியில், இலங்கையின் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடத்த முடியும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக முன்னதாக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை இரத்து செய்து புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேற்படி, குறித்த சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குப் போதியளவு கால அவகாசம் உள்ளதாகவும், அதனை நிறைவேற்றி மூன்று மாதங்களுக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தக்கூடிய சட்டரீதியான இயலுமைகள் கிடைக்கப் பெறும் எனவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.