இலங்கை சோட்டோக்கான் கராத்தே சங்கத்தினால்கொழும்பு ரோயல் மாஸ்க் அரேன உள்ளக அரங்கில் நடாத்தப்பட்ட தேசிய மட்டத்திலான கராத்தே சுற்றுப்போட்டியில் பல மாவட்டங்களில் இருந்தும் பல கழகங்கள் தனி நபர்கள் என பலரும் கலந்து கொண்ட போதிலும் இம் முறை வரலாற்றில் முதல் தடவையாக சிறைச்சாலை திணைக்களத்தை மையப்படுத்திய வீரர்களும் போட்டியில் பங்குபெற தகைமை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகளில் முன்னிலையாகியிருந்த ஒன்பது வீரர்களும் தலா மூன்று தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் என ஒன்பது பதக்கங்களைப் பெற்று சிறைச்சாலை திணைக்களத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதற்காக தனவு முழு அர்ப்பணிப்பையும் வழங்கிய சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் (பிரதான பயிற்றுவிப்பாளர்) மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் தேவகாந்தன் பிரசாத் (பயிற்றுவிப்பாளர்)
ஆகியோருக்கு தமது நன்றிகளை சிறைச்சாலை சக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.