நேபாள் கபடி லீக் போட்டிகள் காத்மாண்டுவில் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகியது.
மொத்தமாக 06 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளின் இறுதி போட்டி 31 திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் குறித்த 06 அணிகளில் ஒரு அணியாக விளையாடும் ஜனக்பூர் நைட்ஸ் (Janakpur Knights) என்னும் அணியில் மட்டக்களப்பை சேர்ந்த இந்து கல்லூரி முன்னாள் மாணவன் லக்ஸ்மமோகன் தனுஷன் என்னும் இளைஞனும் இடம்பெற்றுள்ளார்.
மொத்தமாக 19 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இன்று 27 ஆம் திகதி நடைபெறவுள்ள 16, 17 ஆவது போட்டியாக தகுதி மற்றும் வெளியேற்றப்படுவதற்கான சுற்றுகள் நடைபெறவுள்ளதுடன், நாளை மறுதினம் (29) மற்றுமொரு தகுதிக்கான போட்டியும், 31 ஆம் திகதி இறுதி சுற்றும் நடைபெறவுள்ளது.
அதன் அடிப்படையில் இன்று நடைபெறவுள்ள தகுதி சுற்று, மட்டக்களப்பு இளைஞன் இடம்பெறும் ஜனக்பூர் நைட்ஸ் அணிக்கும் பாரத் நகர் பண்டிட்ஸ் அணிக்கும் இடம்பெறவுள்ளது.
அத்துடன் இதுவரை நடத்த போட்டிகளில் இரண்டு அணிகள் வெளியேறியுள்ளதுடன், மட்டக்களப்பு இளைஞன் இடம்பெறும் ஜனக்பூர் நைட்ஸ் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று , புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வசிப்பதும் குறிப்பிடத்தக்கது.