வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் வீதியில் சனிக்கிழமை (25) திருடப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிளை பொலிஸ் இன்று திங்கட்கிழமை (27) அம்பாறை பகுதியில் வைத்து மீட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளை இருவர் திருடிச் செல்லும் காட்சி சி.சி.ரி.வி கெமெராவில் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், வாழைச்சேனை பொலிஸாருக்கு வழங்கிய தவகலுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக மோட்டார் சைக்கிளை பொலிஸார் அம்பாறை பஸ்தரிப்பு நிலையப் பகுதியில் வைத்து மீட்டுள்ளனர்.
அத்துடன், மோட்டார் சைக்கிளை திருடிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.