வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குள காட்டுப் பாதையில் மாடு மேய்கச் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
வட்டவான் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜீவேந்திரன் சினேஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனுடன் 3 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் மாடு மேய்கச் சென்றுள்ள நிலையில் சம்பவதினமான இன்று, மலம்கழிக்க சென்ற நிலையில் அவர் அங்கு வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.