யாழிலுள்ள ஆலயமொன்றில் மாம்பழம் ஒன்று 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 05 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது.

கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தில் நேற்றையதினம் ஐந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.
இதன்போது, விஷேட அபிஷேக ஆராதனை தொடர்ந்து முருகப் பெருமான் உள்வீதி, வெளிவீதியூடாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனை தொடர்ந்து ஒரு மாம்பழம் 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் பக்த அடியவர் ஒருவரே இவ் மாம்பழத்தினை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.