மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 79 ஆவது ஆண்டு கல்லூரி தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று(01) காலை பாடசாலையின் கொடி ஏற்றப்பட்டு பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு சத்திய பிரமாணம் எடுத்த பின்னர் பாடசாலையின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் அமரர் நல்லையா மாஸ்டர் அவர்களின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்துக்கல்லூரியின் 79 ஆவது ஆண்டு கல்லூரி தினத்தினை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி இன்று(01) காலை முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்களை சமூக மயப்படுத்தும்வ கையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கமும் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் எஸ்.பி.எம் அறக்கட்டளை ஒன்றிணைந்து இந்த செயல்த்திட்டத்தினை இன்றைய தினம் முன்னெடுத்து இருந்தது.
இதன்போது சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் பயணிக்கும் நாவலடி பகுதி கடற்கரை பகுதியினை சுத்தம் செய்யும் பணிகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.