எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இன்று (01) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம்.தர்மரத்ன, சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே.பி.எம் குணரத்ன, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.
களுத்துறைக்கு பொறுப்பாக கடமையாற்றிய பிரதி பொலிஸ்மா பி.ஏ.என்.எல். விஜேசேன, நலன்புரி பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், கடமைகளை நிறைவேற்றும் பெண் பிரதி பொலிஸ்மா அதிபர் பத்மினி, நலன்புரி பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து களுத்துறைக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.