நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவுக்குப் பதில் கூப்பன் வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிரிவா்த்தன வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போதைக்கு எரிபொருள் கொடுப்பனவாக ஒரு லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது.
அதற்குப் பதிலாக கூப்பன் ஒன்றை வழங்கினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் எரிபொருள் போக கணிசமான தொகையொன்றை அரசாங்கத்துக்குச் சேமித்துக் கொள்ள முடியும்.
அதற்கு மேலதிகமாக எரிபொருள் தேவைப்படின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காசு செலவழித்துப் பெற்றுக் கொள்ளட்டும்.
நாங்கள் அனைவரும் பொதுமக்களுக்கு சேவையாற்றவே வந்துள்ளோம். அநாவசிய சொகுசு வசதிகளை நாங்கள் கேட்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.