ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டன் கீழ் காத்தான்குடி நகரசபை பொது மக்களுடன் இணைந்து காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தை சிரமதானம் செய்யும் பணியொன்றினை நேற்று (01) சனிக்கிழமை காலை 7.00 முன்னெடுத்தனர்.
காத்தான்குடி நகர சபை செயலாளர் எம். ஆர். எப். றிப்கா ஷபீன் தலைமையில் இடம்பெற்ற இவ் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்ட விசேட சிரமதானத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் அஷ்ஷெய்க். எம். பீ.எம். பிர்தெளஸ் பங்கேற்றிருந்தார்.
கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டன் கீழ் இடம்பெற்ற விசேட சிரமதானத்தின் ஊடாக காத்தான்குடி 04 மற்றும் 05 ஆகிய பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டது.
இதன்போது காத்தான்குடி நான்கு பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக முன்வைத்து வந்த பாவனையற்ற வடிகான் மண் இட்டு நிரப்பப்பட்டதோடு, நடைபாதையில் நீண்ட நாட்களாக காணப்பட்டு வந்த பாரிய மரக் கிளைகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றி குறித்த பகுதி சுத்தப்படுத்தப்பட்டதுடன் ஆற்றங்கரையை அண்டி காணப்படும் நிழல் தரும் மரங்களின் கிளைகளை அகற்றியும் துப்பரவு செய்யப்பட்டது.
இச்சிரமதானத்தில் காத்தான்குடி நகர சபை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.