இந்தியாவில் இருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்ட முட்டைகள் மூலம் பறவைக்
காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினதலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் முட்டைகள் அழுகும் முன் மக்களுக்கு விநியோகம் செய்யப் படவேண்டிய தாலேயே அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில் சில ஏற்கனவே பழுதடைந்த நிலையில் உள்ளன. அவை காலாவதியாகும் திகதி அழிக்கப்பட்டு சந்தையில் விநியோகிக்கப்படுகின்றன. இந்திய முட்டைகள் குறைந்த விலைக்கு வாங்கி சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.இதன் மூலம் பறவைக்காய்சல் பரவும் அபாயம் உள்ளது-என்றார்.