Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவையும்-இலங்கையையும் இணைக்க பாலம்; இந்தியாவின் உப மாநிலமாக மாறப்போகும் இலங்கை!

இந்தியாவையும்-இலங்கையையும் இணைக்க பாலம்; இந்தியாவின் உப மாநிலமாக மாறப்போகும் இலங்கை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையைமாற்ற முயற்சிக்கின்றனர். பாலத்தை நிர்மாணிப்பதால் இந்தியாவின் நலன்களே நிறைவேறும். இலங்கையின் தேவைப்பாடுகள் பாலம் நிர்மாணிப்பதால் நிறைவேறாது என பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தி ஜீவிகள் ஒன்றியத்தின் தலைவருமான பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புத்தி ஜீவிகள் பங்கேற்கும் ஊடகசந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதில்
கலந்துகொண்டு இவ்வாறு கூறிய பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவிக்கையில்- இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றனர். பாலத்தை நிர்மாணிப்பதால் இந்தியாவின் நலன்களே நிறைவேறும். இலங்கையின் தேவைப்பாடுகள் பாலம் நிர்மாணிப்பதால் நிறைவேறாது.

இலங்கையின் தேவைப்பாட்டுக்காகவன்றி, இந்தியாவின் தேவைப்பாட்டுக்கு ஏற்பவே இந்த பால
நிர்மாண விடயம் கையாளப்படுகிறது. இதனால் இலங்கையின் நலன்களை விட இந்தியா வின் நலன்களே மேலோங்கும்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 6.7 வீதமானோர் தொழிலற்று இருக்கின்றனர். நாளாந்தம் வேலை
வாய்ப்பை இழக்கும் தொகை அதிகரித்து வருகிறது.2022 இறுதியில் 5.5 மில்லியன் மக்கள் புதிதாக வறுமைக்குட்பட்டுள் ளனர். இது 27.4 வீதமாக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. பொருளாதாரம் சரியான நிலைப்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. ஜனாதிபதி இதற்குண்டான தேவைப் பாடுகளை பூர்த்தி செய்வதாக புலப்படவில்லை.

அஸ்வெசும பெறச் சென்று உயிரிழக்கின்றனர். ஜீவனோபாயத்தை நடத்த தேவையான ஒழுங்கில் பொருளாதார வளர்ச்சி நாட்டில் நடைபெறுவதாக இல்லை. அதிகாரத்தை பெறும் நோக்கிலான பொறுப்பற்ற விதமாக அரசியல் விளையாட்டிலேயே தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் மொட்டுக் கட்சியும் ஈடுபட்டுள்ளன.பொருளாதாரத்துக்கு தீர்வாக அதானி போன்ற சர்வதேச மட்டத்தில்
வட்டிக்கு பணம் வழங்குநர்களிடம் தேசிய வளங்களை விற்பதே இந்த அரசாங்கத்தின் கொள்கையாக மாறியுள்ளது.

சர்வதேச நாடுகளின் அதிகார போட்டியில் இலங்கை சிக்கியுள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முற்றிலும் மாறான செயற்பாட்டையே ஜனாதிபதி மேற் கொள்கிறார். கல்விச் சீர்திருத்தம் தேவை என்றாலும், கல்விச் சீர்திருத்தம் என்ற போர்வையில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய தேசிய முன்னுரிமை வழங்கப்படுகிறது.தொடர்ச்சியாக தேர்தலை காலம் தாழ்த்தி, சர்வ கட்சி மாநாட்டை நடத்தி, மக்களையும் சர்வதேச தலைவர்களையும் இந்தியாவையும் ஏமாற்றும் நடவடிக்கையிலேயே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வெட்கமின்றி ஈடுபட்டு வருகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையேனும் நடத்துமாறு இந்திய பிரதமர் ஜனாதிபதிக்கு தெரிவித்தமை இலங்கையின் நன்மதிப்புக்கே களங்கம் ஏற்படுத்தியுள்ளது.நாடும் நாட்டு மக்களும் நாமும் எதிர்பார்த்த போக்கில் நாட்டின் பொருளாதார மீட்சி இடம்பெறுவதாக இல்லை. அதற்கான உண்மையானகாரண காரிய செயற்பாட்டிலான பிரவேசத்துக்கு செல்வதாக இல்லை. பொருளாதார மீட்சிக்கு தேசிய வளங்களை விற்பது தீர்வாகாது நாடுகளுக்கு ஏலம் விடுவதும் தீர்வாகாது-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
இந்திய தூதருக்கும்- தமிழ் கட்சிகளுக்குமிடையே முக்கிய சந்திப்பு!

இந்திய தூதருக்கும்- தமிழ் கட்சிகளுக்குமிடையே முக்கிய சந்திப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.