இந்த ஆண்டில் 1,65,000 வேலை விசாக்களை வழங்குவதற்கு இத்தாலி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கூடுதலாக 10,000 விசாக்களை பராமரிப்பு பணியாளர்களுக்காக ஒதுக்க இத்தாலி தீர்மானித்துள்ளதோடு பணியாளர்களுக்கான அதிக வாய்ப்புகள் இத்தாலியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இத்தாலியில் தொழிலாளர் பற்றாக்குறை, முதியோர் அதிகரிப்பு, பிறப்பு வீதத்தில் குறைவு போன்ற காரணங்களால் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை ஈர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், கட்டிடக்கலை தொழிலாளர்கள், பொறியாளர்கள், உணவக பணியாளர்கள், சமையலர்கள், ஹோட்டல் ஊழியர்கள், மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு நிபுணர்கள், பயிர் உற்பத்தி மற்றும் கடற்றொழில் போன்ற துறைகளில் இத்தாலியில் வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, சீசனல் அல்லாத வேலை விசா சீசனல் வேலை விசா, பராமரிப்பு பணியாளர் விசா, சுயதொழில் விசா மற்றும் ‘EU Blue Card’ போன்ற விசா வகைகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய, இத்தாலியில் உள்ள வேலை வழங்குநரின் அனுமதியை பெற்று இத்தாலி தூதரகத்தில் விண்ணப்பித்து விசாவினை பெற்றுக் கொள்ள முடியும்.