27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் மீதும் வரிவிதிப்போம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப், ஐரோப்பிய யூனியன் மீது புதிய வரிகளை விதிப்பேன். அவர்கள் நம்மை பயன்படுத்தி கொள்கிறார்கள். எனவே வரிவிதிப்பு எப்போது என்று சொல்ல மாட்டேன். ஆனால், விரைவில் நடக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ட்ரம்ப் தங்கள் மீது வரிவிதித்தால் கடுமையான பதிலடி கொடுப்போம் என ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஐரோப்பிய யூனியன் செய்தித் தொடர்பாளர், கனடா, சீனா, மெக்சிக்கோ மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு வருத்தமளிக்கிறது.
தேவையற்ற வரிகள் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தி பணவீக்கத்துக்கு வழிவகுக்கும். இது அனைத்துத் தரப்பையும் பாதிக்கும். ஐரோப்பிய யூனியன் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று தெரித்துள்ளார்.
உலகமயமாக்கல் காரணமாக அனைவரும் பயனடையும் சூழலில் ட்ரம்ப் வரிவிதிப்பு மூலம் உலகை துண்டாட முயற்சிக்கிறார் என்று ஜெர்மன் ஜனாதிபதி ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு ஜப்பானும் அச்சம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்தியா ,சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு டொலருக்கு பதிலாக புதிய பணப்புழக்கத்தை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார். இதனால் சர்வதேச அளவில் ட்ரம்பின் நடவடிக்கைகளால் வர்த்தகப் போர் மூண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.