இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் போதைப்பொருட்களுடன் கிட்டத்தட்ட 5,000 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 31 வரை நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனைகளின்போது 602 கிலோகிராம் கஞ்சா, 24 கிலோ 245 கிராம் ஐஸ், 25 கிலோ 483 கிராம் ஹாஷிஷ் மற்றும் 6 கிலோகிராம் ஹெரோயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கிட்டத்தட்ட 5,000 சந்தேக நபர்களை நாங்கள் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.