வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான உதவிக் கல்வி கருத்தரங்கு இன்று (3) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை அடைவதை இலக்காக கொண்டு இவ் கருத்தரங்கானது இன்று (03) தொடக்கம் 09.02.2025 ஆம் திகதி வரை நடைபெற 1990 (O/L) பழைய மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மொழியும் இலக்கியமும், வரலாறு,ஆங்கிலம்,விஞ்ஞானம் மற்றும் கணிதம் போன்ற பாடங்கள் உள்ளடக்கியதான பரீட்சை வழிகாட்டி செயலமர்வாக சிறந்த வளவாளர்களைக் கொண்டு இவ் கருத்தரங்கு அமைந்துள்ளது.
இதேவேளை இந் நிகழ்வில் குறித்த பாடசாலையில் இம்முறை நடைபெற்று முடிந்த 5 ஆம் தர புலமைப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 180 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் சித்தியடைந்த மாணவி ஜோர்ச் ரோஷலினா நினைவுப் பரிசில் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் பாடசாலையின் கல்வி மேம்பாட்டிற்காக மாணவர்களின் கல்வி வளர்சியில் பங்காற்றிய ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமதி பவானிதேவி கனகசிங்கத்தின் சேவையினை பாராட்டி வாழ்த்துப்பா உரை நிகழ்த்தப்பட்டு வாழ்த்துமடல் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இன்றைய நிகழ்வில் அதிதியாக இந்துக்கல்லூரியின் அதிபர் எ.ஜெயக்குமணன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.