கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
750000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை தீர்வை வரி செலுத்தாமல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த பெண் பயணியை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் கைது செய்தனர்.
குறித்த பெண் ஹோகந்தரவில் வசிக்கும் 42 வயதானவர் மற்றும் ஒரு தனியார் வணிக நிறுவனத்தில் நிதி மேலாளராக பணியாற்றி வருகின்றார்.
பெண் எடுத்துச் சென்ற பொருட்களில் 47,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 235 சிகரெட் அட்டைப்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.