அம்பாறை, சம்மாந்துறை, உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்கனவே நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், 85 முதல் 90 ரூபா வரை மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கம் இன்னும் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்கவில்லை என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.