மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையின் 75 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்த தீ விபத்து இன்று (05) அதிகாலை 05.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மீரிகமவிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தே ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த நிலையில் தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.
மேலும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.