வடக்கு பிலிப்பைன்ஸில் மிகவும் பரபரப்பான அதிவேக வீதிகளில் ஒன்றில் கட்டணம் அறவிடப்படும் வாயில் பகுதியில் பஸ் ஒன்று பல வாகனங்கள் மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, நித்திரை ஏற்பட்டமையே விபத்துக்கான காரணம் என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான பஸ்ஸை இடைநிறுத்த அந்நாட்டு போக்குவரத்து திணைக்களம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.