சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழு சமனலவேவ பொலிஸார் அளித்த முறைப்பாடின் அடிப்படையில் இவ்வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

பிரதான சந்தேக நபர் உட்பட 16 பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பொலிஸில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சரித் என்ற மாணவன் கடந்த 29ஆம் திகதி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் புஸ்ஸல்லாவை பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளனர்.
மேலும், முறைப்பாடுகள் குறித்து உடனடியாக விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். அதன்படி, சமனலவெவ பொலிஸாரின் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடின் பேரில், 5 பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.