மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நீர் நிலையிலிருந்து சடலம் ஒன்று இன்று (06) பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பட்டாபுரம் கிராமத்தைச் சேரந்த 56 வயதுடை 4 பிள்ளைகளின் தந்தையான சேதுநாதபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-241-1024x529.png)
இன்று ( 06 ) அதிகாலை மீன் பிடிப்பதற்காக அவரது வீட்டிலிருந்து குறித்த நபர் புறப்பட்டுள்ளார் மீன் பிடிக்கச் சென்றவரைக் பகல் வேளையாகியும் காணவில்லை என உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர். இந்நிலையிலேயே அவர் நீர் நிலையில் உயிரிழந்த நிலையில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-242.png)
சம்பவம் அறிந்த களுவாஞ்சிக்குடி பொலிசார் ஸ்த்தலத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-243.png)