கொழும்பு – தலங்கம பகுதியில் ஐந்து துப்பாக்கிகளுடன் வங்கி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-277.png)
இதன்போது, சந்தேக நபர் தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கிகளில் ஒன்றிற்கு உரிமம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன், சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.