தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் கலந்துக்கொண்டு வலுசேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த போராட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும், தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே 03 ஆம் திகதி தொடக்கம் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது.